டெல்லி: 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

‘பிரளே’விற்கான பயனர் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒற்றை ஏவுகணையிலிருந்து அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,   துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்க டிஆர்டிஓவின் தொடர்ச்சியான 4வது நாள் சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணைகள்,  ஒடிஸாவின் சந்திப்பூா் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் டிசம்பர் 31ந்தேதி (புதன்கிழமை) இந்த சோதனை நடைபெற்றது.   தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய குறுகிய தொலைவு அதிநவீன ஏவுகணையான ‘பிரளே ஏவுகணை’ 1,000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து சென்று, 500 கி.மீ. வரை பாய்ந்து தாக்க வல்லது. இலக்கைத் துல்லியமாக தாக்குவதற்கு அதிநவீன வழிகாட்டல் அமைப்புமுறையைக் கொண்டது. பல்வேறு இலக்குகளைக் தாக்கும் வகையில், பன்முக ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய பிரளய் ஏவுகணைகள் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில்  ஒரே ஏவுகலனில் இருந்து குறைந்த நேர இடைவெளியில் 2 ஏவுகணைகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டதில், நிா்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆா்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனா். பிரளய் ஏவுகணை மதிப்பீட்டு ஆய்வில் இது குறிப்பிடத்தக்க வெற்றி; இச்சோதனையின் மூலம் இந்த ஏவுகணையை ராணுவத்தில் இணைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்றும் அவா்கள் கூறினா்.

இச்சோதனை தொடா்பான விடியோவை டிஆா்டிஓ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிக்காக, டிஆா்டிஓ, இந்திய ராணுவம், விமானப் படை, சம்பந்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

[youtube-feed feed=1]