சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழ்நாட்டை மிரட்டிய டிட்வா புயல் காரணமாக, நவம்பவர் இறுதி மற்றும் டிசம்பர் முதல்வாரங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்தன. அந்த ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி இறுதி வாரத்தில் நபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.24, 28, 29 டிச.2, 3ம் தேதியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.20, 21, 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]