சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன், அமைச்சர்கள்  இன்று (22ந்தேதி)  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இந்த பேச்சுவார்த்தையில்,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

[youtube-feed feed=1]