டெல்லி: தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம் என லோக்சபா எதிர்க்கட்சிதலைவர்  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொடர்பான செய்தியை இணைத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருவதால், இண்டிகோவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரும் இடையூறுக்கு அரசாங்கத்தின் “ஏகபோக மாதிரி” தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்

நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த  இன்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான  இண்டிகோ நிறுவனம், மத்தியஅரசின் கட்டுப்பாடுகளால் முடங்கி உள்ளது. இண்டிகோ நிறுவனம்,  உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை  இயக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த நிறுவனம் விமானம் ரத்து, விமானம் தாமதம் என தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை உள்ளிட்டவை இந்த குழப்பத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் “விமான கடமை நேர வரம்பு” விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த விதிகள்,  விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் இந்த புதிய விதிகள், அவர்களின் பணி அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்தாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய விதிமுறையின் கீழ், ஒரு விமானிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தர வேண்டும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இரவுப்பணியில் அமர்த்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளால் பல்வேறு விமான நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக, DGCA விதிகளுக்கு ஏற்றவாறு இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் புதன்கிழமை ரத்தாகின. வியாழன்கிழமையும் இதே நிலை தொடர்ந்ததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில்,  இண்டிகோல நிறுவனம், டெல்லியில் 33 விமானங்கள், ஐதராபாத்தில் 68 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், பெங்களூவில் 73 விமானங்கள் என நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் கொந்தளித்து வருகின்றனர. தங்களுக்கு மாற்று ஏற்பாடு தர வேண்டும் அல்லது டிக்கெட் பணத்தை திருப்பித் தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி, தனது எக்ஸ் தளத்தில் விமான சேவை தொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள பதிவில்,  “இண்டிகோவின் தோல்வி, பாஜக அரசின் அதிகார நோக்கத்திற்கு கொடுக்கப்பட்ட விலையாகும். விமானங்கள் தாமதங்கள், விமான சேவை ரத்து செய்யப்படுவதற்கு சாமானிய இந்தியர்களே விலை கொடுக்கிறார்கள்.

அதாவது விமான சேவை பாதிப்பால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா ஒவ்வொரு துறையிலும் ‘மேட்ச் ஃபிக்சிங்’ செய்யாமல் நியாயமான முறையில் போட்டிகளில் ஈடுபடத் தகுதியுள்ளதாகும்” என்று பதிவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு தான் எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் பகிர்ந்து இந்த பதிவை இட்டுள்ளார்.