திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தன் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா. இவரது கணவர் ஜேம்ஸை அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன் தருவை சர்ச் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜேம்ஸ் சித்தர் செல்வன்(57). இவரது மனைவி மெட்டில்டா ஜெயராணி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவியாளர் ஆக பணிபுரிகிறார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது குடும்பம் தட்டார் மடம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் ஜேம்ஸ் சித்தர் செல்வன், புத்தன் தருவையில் உள்ள தாயார் தனது வீட்டில் இருந்து சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இதனிடையே, புத்தன் தருவையில் உள்ள இடத்தை அளவீடு செய்வது தொடர்பாக அவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஆபிரகாம் லாரன்ஸ் மகன் ஜேக்கப் (44) என்பவருக்கும் இடையை நீண்டகாலமாக முன் விரதம் இருந்ததாம். இந்த நிலையில் தனது தாயார் வீட்டிலிருந்த ஜேம்ஸ் சித்தர் செல்வனை, அங்கு வந்த ஜேக்கப் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம், இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிந்து ஜேக்கபை தேடி வருகின்றனர்.