சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம்  எழுதி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக கூறி வரும் தவெக தலைவர் விஜய், தனது கட்சியுடன்கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.  சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவிலும், முதல்வர்  வேட்பாளர் விஜய் என்றும் அறிவித்துள்ளர். இதனால், அவருடன் கூட்டணி சேர விரும்பிய சில கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்க பொதுச்சின்னம் வழங்கக்கோரி டெல்லியில் உள்ள இந்திய தலைமைதேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் அனுப்பியுள்ளது.  அத்துடன், கிரிக் கெட்மட்டைஆட்டோவிசில் உள்ளிட்ட 10  சின்னங்களை குறிப்பிட்டு அதில் ஒரு பொதுச்சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான மனுவை இ தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில்,  இன்று காலை ‘ தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் மனுவை வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகம் மனுவில், கட்சிக்கான 10 விருப்ப சின்னங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், விஜயின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிதில் மனதில் பதியும் வகையில் “கப்பல், விசில், ஆட்டோ, பேட்” போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி, இச்சின்னங்களில் சிலவற்றை விஜய் தரப்பே வடிவமைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக சின்னம் ” தமிழக வெற்றிக் கழகம் 07.02.2025 அன்று பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் அமைப்பு வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தயாராக உள்ளது. எனவே, உடனடியாக கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என அந்த கட்சி வழங்கியுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.