சென்னை:  தமிழ்நாட்டில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 3 முக்கிய திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அர்ச்சகர்களுக்கு ஒதுக்கீடு செய்து, அந்த குடியிருப்புகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைச்செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  6 கோவில்களில் கட்டப்பட்டுள்ள  குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 6 திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.