சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இ நடப்பாண்டு டிசம்பர் 4ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த விழாவின் உச்சக்கட்ட நிகழ்வுகள், 10-வது நாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும். 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகாதீபத்தை காண நாடு முழுவதும் இருநது லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலம் முழுவதிலுமிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன்றன.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக செய்யப்படவேண்டிய ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத் துறையினருடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னை, விழுப்புரம், வேலூர், ஆரணி, சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுச்சேரி, பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, திருவண்ணாமலை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, வட்டார போக்குவரத்துத் துறையின் மூலமாக, திருவண்ணாமலையில் தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்களை அமைத்து, அங்கிருந்து தேவைக்கு ஏற்ப பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள்
மேலும், தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் சென்றுவர, 70 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தீபத் திருவிழா நாளில், சுமார் 4 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளதால், சாலை பராமரிப்பு, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கார்த்திகை தீபம் மற்றும் கிரிவலம்
திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில், அதிகாலை 4 மணிக்கே கோயில் கருவறையின் உள்ளே பரணி தீபம் ஏற்றப்படும்.
பின்னர், மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 4-ம் தேதி, பௌர்ணமி கிரிவலம் நடைபெறும்.
இந்த கிரிவலத்தில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு, பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம்.