சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை என தமிழ்நாடு அரசுமீது மீதுஏற்கனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த  தொடர் அதிருப்தி,  சமுக வலைதளங்களில் விவாப்பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  அறநிலையத்துறை மட்டுமின்றி, பல்வேறு வழக்கு களில், உயர்நீதிமன்ற தீர்ப்பினை அரசு மதிக்க தவறி வருவது, அனைவரும் அறிந்தது.  இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் திமுக அரசுமீது அதிருப்தி தெரிவித்துஉள்ளது.  இது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை என்பதே வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பலர்,  இது ஆட்சியாயளர்கள்  அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்றும்,   நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய  நீதிமன்றம், ஒவ்வொரு முறையும் கண்டிப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது.  மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள், நடத்தை தவறும்போது, அவர்கள்மீது  நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்துக்கு துப்பில்லையா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே தெருநாய் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படாது , தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில்  பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும், மதிக்காமல் காற்றில் பறக்க விடும் போக்கும், விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில்  நேற்று  (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது.

இதுதொர்பாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர்  உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”கரூர் வெண்ணெய்மலை பாலசுபரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது “கோவில் சொத்துகளை அபகரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘மேலும், “கோர்ட்டு ஏதோ உத்தரவுகளை பிறப்பிக்கிறது என அதிகாரிகள் நினைக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளை அவர்கள் பின்பற்றவில்லை என்பதில் அதிருப்தி உண்டு,” எனக் கடும் விமர்சனத்தையும் தெரிவித்தனர். தொடர்ந்து, கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றத் தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், “கோவில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும். கரூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும்,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….

சென்னை காவல்துறைமீது அதிருப்தி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்!

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை… உயர்நீதிமன்றம் அதிருப்தி

திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிருப்தி…

அமைச்சர் துரைமுருகன் வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

https://patrikai.com/chennai-hc-shows-unsatisfactory-on-minister-ponmudi-case-enqyiry/