சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக மக்களிடையே போதை பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெண்கள் என பல தரப்பினரும் மது குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகம் போதையில் தள்ளாடி வருகிறது. போதை காரணமாக பல்வேறு சட்ட விரோத செயல்கள், பாலியல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி, பல பகுதிகளில் 24மணி நேரமும் மதுபான கடைகள் திறந்து அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவில்  ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில்,  அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 19ந்தேதி ரூ.293 கோடி;ககும், தீபாவளி அன்று ( 20-ந் தேதி)  ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டு மக்கள் போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதை அம்பலப்படுத்தி உள்ளது.

குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?

https://patrikai.com/tasmac-sales-target-of-rs-600-crore-by-diwali/