சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை ரூ. 1லட்சத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழ) அதிரடியாக பவுனுக்கு ரூ. 1,960 உயர்ந்து .ரூ. 94,600–க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ. 245 உயர்ந்து ரூ.11,825-க்கு விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பெண்களிடையே ஆர்வமும், பெரும் வரவேற்பும் பெற்றுள்ள தங்கத்தின் விலை சர்வதேச வணிகத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய மிடில் கிளாஸ் குடும்பங் களில் தங்கம் அவசர காலத்திற்கு பணமாக்குவதற்கான ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய குடும்பங்களில் முதலீடு, சேமிப்பு என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். இந்த தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உய்ர்ந்து வருவது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக உலக நாடுகளின் பொருளாதார ஏற்ற இறக்கம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய நாணயத்தின்மீதான மதிப்பு குறைவு போன்றவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கின்றன.
இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ( அக். 7 ஆம் தேதி) சவரன் தங்கம் விலை ரூ. 90,000-யைக் கடந்தது. அடுத்த 3 நாள்களிலேயே (அக்.11) ரூ. 92,000 -யை எட்டியது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ.92,640- க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ரூ. 94,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 245 உயர்ந்து ரூ.11,825-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதனால் மக்கள் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உள்ளனர்.