சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்கள் வளர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தெருநாய்களின் கடித்து ஆளாகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுகாதார ஆய்வு நிறுவனம், WHO 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் உயிரிழப்பு இல்லாத நாடாக உலக நாடுகள் மாற வேண்டும் என இலக்கு வைத்து வணியாற்றி வருகிறது.
சென்னை போன்ற மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் பல பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்தே வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்துக் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பொது சுகாதாரத்துறைக் கூறியுள்ளது.
கடந்த 8 மாதங்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ரேபிஸ் தொற்றில் இருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்குத் தடுப்பூசி தீர்வாக உள்ளது எனச் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ளது.
நாய் கடி தடுப்பதற்கும் நாய் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கும் பொது சுகாதாரத் துறைத் தரப்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது