சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிறகு, துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ப ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், ராஜிநாமாவைத் தொடர்ந்து, நடைபெற்ற துணை குடியரசு தலைவருக்கான தேர்தலில்,    என்டிஏ கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர்  சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட  முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தோல்வி அடைந்தார்.

வெற்றிபெற்ற  சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது பதவி ஏற்பு விழா செப்டம்பர் 12ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  இன்று  நடைபெற்ற விழாவில்,  ஜனாதிபதி திரௌபதி முர்மு துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு  பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்பட மத்தியய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள்,  முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிறகு, துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ப ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.