ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

மாநிலத்தின் தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் நிலச்சரிவு மற்றும் மழை  வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சாலைகள் பலவும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சோகமான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில் இருந்து மக்கள் மீண்டுவர அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

நிலச்சரிவு காரணமாக, வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.