சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்திருந்த நிலையில், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும்  பாராசூட் சோதனை  நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அந்த வரிசையில் விரைவில் இணையப் போகிறது இந்தியா…. இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான் இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளுக்கு மகுடம் சூடப்போகிறது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ககன்யான் விண்கலம், விண்வெளித்துறையில் தன்னிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியுள்ளது.

கடந்த 2023ம் அக்டோபரில் ககன்யான் திட்டத்திற்கான மாதிரி விண்கலம் TV-D1, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் செலுத்தி முதற்கட்ட வெற்றியை ஈட்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாக,  , IADT-01 எனப்படும் Integrated Air Drop Test என்ற சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படை, கடற்படை, இந்திய கடலோர காவல்படையினர் இஸ்ரோவுடன் இணைந்து இந்தச் சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் சென்று திரும்பும் வகையில்,  பிரத்யேகமாக ககன்யான் விண்கலம், அதை  பத்திரமாக தரையிடும் வகையில், வேகக் குறைப்பு அமைப்பு உடன் கூடிய பாராசூட்டும்  தயாரிக்கப்பட்டது. இந்த பாராட்சூட்டின் உதவியாக,  ககன்யான் விண்கலம் போன்ற அமைப்பைப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்தப் பாராசூட் அமைப்பு, விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டல மேலடுக்கிற்குள் நுழையும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கவும், சேதாரம் இல்லாமல் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரோ மேற்கொண்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம், விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்களை பத்திரமாகத் தரையிறக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடன் திட்டத்தின்கீழ், மூன்று பேர் கொண்ட இந்திய விண்வெளி வீரர்கள் குழு, பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் மேல் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், மூன்று நாள் ஆய்வுக்குப் பின்னர் பத்திரமாகப் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தில் பயணம் செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசாந்த் பால கிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகியோர் ரஷ்யாவில் 2020 பிப்ரவரி முதல் 2021 மார்ச் வரை விண்வெளிப் பயணம் தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருந்தனர்.

அண்மையில் ஆக்சியம்-4 மிஷனில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பியது ககன்யான் திட்டத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இந்த நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள இஸ்ரோ, டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான பணியைத் தொடங்கும், முன்முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், ககன்யான் திட்டங்களுக்கான பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பின் முழுமையான செயல் விளக்கத்திற்கான முதல் ஒருங்கிணைந்த வான்வழித் துளி சோதனையை (IADT-01) இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சோதனை இஸ்ரோ, இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்