டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள  துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா  மற்றும் கார்கே முன்னிலையில் தனது  வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,  கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை  திடீடரென ராஜினாமா செய்தார். இதையடுத்து  நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   அதன்படி,  குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.  அன்றே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  செய்ய இன்றே (ஆகஸ்டு 21) கடைசி நாள். இதற்கிடையில்,நேற்று  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட , தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் குடியரசு துணைத்தலைவர்   சி.பி.ராதாகிருஷ்ணன்  பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட கூட்டணி கட்சி தலைவர்களுடன்  சென்று மாநிலங்களவை செயலாளர் P.C.மோடியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.  எதிர்க்கட்சிகளின் சார்பில்  குடியரசு துணை தலைவர் வேட்பாளரான நிறுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி,  சுதர்சன் ரெட்டி  காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

 

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!