சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது தொகதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறந்து வைத்ததுடன், பொதுமக்களக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு,  மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பில் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

கடந்த மாதம் இறுதியில் கொளத்தூர் சென்றுகொண்டிருந்தபோது, உடல்நலம் பாதிப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு மீண்டும் மக்கள் பணியாற்றி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அங்கு வந்த அவரை சாலையின் இருமங்கிலும் கூடியிருந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகர்ச்சியில்,  பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்துதுடன்,  கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம்,  பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம்,  ரெட்டேரியில் AC பேருந்து நிறுத்தம் என,  ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் அதனுடன் நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!  என குறிப்பிட்டுள்ளார்.