சென்னை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் களம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளி அமளியால் முடக்கப்பட்டு வருகிறது.  ர்பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பயிற்சி குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதங்களைத் தவிர, ஜூலை 21 அன்று மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை  நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஜனாதிபதி முர்முவை சந்தித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி பவனில் சந்தித்தார். அப்போது,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளையும், புது தில்லி ரஷ்ய இராணுவ உபகரணங்கள் மற்றும் எண்ணெயை வாங்கியதற்காக குறிப்பிடப்படாத அபராதத்தையும் அறிவித்து உள்படபல விஷயங்கள் குறித்து விவாதிதததாக கூறப்படுகிறது