துரை

ம்பிரகாஷ் மீனா மத்ரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவி ஏற்றுள்ளார்

இதுவரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்தததால் அவருக்கு பதிலாக புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா தற்போது பதவி பொறுப்பினை ஏற்றார்.

கடந்த 1996ம் ஆண்டு இந்திய ரெயில்வே பொறியாளர் சேவை பிரிவில் பணியில் சேர்ந்த இவர் இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு பணியில் சேர்ந்தார். இவர் ராஜஸ்தான், ஜோத்பூர் எம்பிஎம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் ஆக்ரா, ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் கோட்டங்களில் கோட்ட பொறியாளராகவும், கூடுதலாக ஆக்ராவில் முதுநிலை (பொறுப்பு) கோட்ட பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது பணிமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் தென்னக ரெயில்வேயின் மதுரை மண்டல புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்றுள்ளார்.