காவிரி விவகாரத்தில் தமிழகம் மறைந்த பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலா காங்கிர1 மத்தியஅரசு மற்றும் கேரள காங்கிரஸ் மாநில அரசால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்து, தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார் வாழப்பாடி. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு 1991 ஆண்டு ஜூலை 29 அன்று அரங்கேறியது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் பிரதமர் நரசிம்மராவ். அவரது அமைச்சரவையில், தொழிலாளர் நலத் துறை பொறுப்பு வாழப்பாடியாருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே வாழப்பாடியார் தொழிலாளர்கள்மீதும்,தொழிற்சங்கத்திர் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால், அவருக்கு அந்த அமைச்சர் பதவி வழங்கியது பொருத்தமாக இருந்தது.
இந்த நிலையில், தமிழகம் கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினை ஏற்பட்டது. டெல்டா விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட அப்போதைய முதல்வர் பங்காரப்பா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், இரு மாநலிங்களுக்கு இடையே காவிரி பிரச்சினை விசுவரூபமெடுத்தது. இதுகுறித்து மத்திய அமைச்சராக இருந்து வந்த வாழப்பாடியார் பிரதமர் நரசிம்மராவிடம், பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தினார். ஆனால், நரசிம்மராவோ, செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.
இதைற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. நரசிம்மராவ் அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்கை கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் மத்திய காங்கிரஸ் அரசு மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதற்கிடையில் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வாழ்ப்பாடியார் கொத்தித்தெழுந்தார். இதுதொடர்பாக மீண்டும் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து விவாதம் செய்தார். ஆனால், அதை நரசிம்மராவ் மதிக்க வில்லை. மத்திய அரசின் செயல்மீது அதிருப்தி கொண்ட வாழப்பாடியாரால், சும்மா இருக்க முடியவில்லை. உடனே காவிரி விவகாரத்தில் மத்தியஅரசு நடந்துகொண்ட விதம், தமிழ்நாட்டுக்கு எதிரான – நீதிக்குப் புறம்பான செயல் என்று, நரசிம்மராவுக்கு பகிரங்கமாக கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு நரசிம்மராவ் பதில் அளிக்காமல் எப்போதும் மவுனமாகவே இருந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாழப்பாடியார், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக, தனது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பதவியை எந்தவித ஆரவாரம் இன்றி ராஜினாமா செய்துவிட்டு, டில்லியிலிருந்து தமிழகத்துக்கு பறந்து வந்தார் ! இது மத்திய காங்கிரஸ் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்கள் நடைபெற்றது 1991ம் ஆண்டு. அதே ஆண்டின் 29ந்தேதி அன்று வாழப்பாடியார், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா துச்சமென தூங்கி எறிந்து விட்டு சென்னை திரும்பினார். தமிழக விவசாயிகளுக்காகவும், தமிழ்நாட்டுக்க்கா வும் தனது அமைச்சர் பதவியை தியாகம் செய்த வாழப்பாடியார் தமிழக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். விவசாயிகளின் மனதில் என்றும் உயர்ந்து நிற்கிறார் வாழப்பாடியார்!