தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் முன்னிலையில் மலேசியாவில் இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமேயற்ற மலேசிய பிரதமர், பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

ஜூன் 29 முதல் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்ட நிலையில், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக மோதல்… சீனாவின் ஒத்துழைப்புடன் சமரச முயற்சியில் இறங்கினார் டிரம்ப்…