துரை

ல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்காக நிகிதா என்ற கல்லூரி பேஎராசிரியை சென்றபோது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததால் இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடெங்கு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடம், திருப்புவனம் காவல் நிலையம், கோவில் என பல இடங்களில் விசாரித்து வருகின்றனர். இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில், அஜித்குமார் மீது புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா முதல்முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.