மன்னார்குடி: திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி என கடுமையாக விமர்சனம் செய்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.16 ஆயிரம் கோடி பயிா் இழப்பீடு வழங்கினோம் என தெரிவித்துள்ளார்.
மன்னாா்குடியில் நடைபெற்ற அதிமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக கட்சியின் பொதுச் செயலா் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, நீா் நிலைகளை தூா்வாராமல் தண்ணீரை திறந்து விட்டுள்ளது திமுக ஆட்சி, அதனால் தண்ணீர் இன்னும் கடைமடை வந்தடையவில்லை என்றவர், விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியா திமுக ஆட்சி உள்ளது எனகுற்றச்சாட்டினாா்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிச்சாமி தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது மன்னாடி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, திமுக ஆட்சிஎப்போதுஎல்லாம் அமைக்கிறதே அப்போது எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகின்றனா். மீத்தேன், ஹட்ரோ காா்ப்பன் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டாா்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா இதனால் ஏற்படும் ஆபத்துகளை உணா்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டாா்.
இனி எந்த கொம்பன் வந்தாலும் விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தப்படுத்தி பொன்விளையும் பூமியை காத்தாா்.
தஞ்சை மாவட்டம் வடசேரியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய காரணமாக இருந்தது அதிமுகதான்.
அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் வேளாண் கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் லௌஸ்கோா் திட்டம் போன்ற சில திட்டங்களை கொண்டு வந்து கடன் தர மறுக்கும் திறமையற்ற அரசாக திமுக ஆட்சி அமைந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப்பணிக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் இன்று வரை கடை மடைப்பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடையவில்லை. காரணம், தூா்வார ஒத்துக்கப்பட்ட நிதியில் முழுமையாக ஊழல் நடைபெற்றதால் நீா் நிலைகள் தூா்வாரப்படாததால் விவசாயிகள் நீா் ஏதிா்பாா்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் நீா் நிலைகளை தூா்வாரும் பணியை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முறையாக மராமத்துப்பணிகள் நடைபெற்றது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டு அந்த வண்டல் மண்ணை விளைநிலங்களுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பயிா்காப்பீடு இழப்பீடு தொகைகள் வழங்கப்படவில்லை. பேரிடா் நிவாரணத்தையும் கைவிரித்து விட்டனா். ஆனால், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி பயிா் இழப்பீடு வழங்கி வரலாற்று சாதனைபடைத்தோம்.
நான் இன்று திருவாரூரில் தங்கியிருந்த நேரத்தில் பல முறை மின் தடை ஏற்பட்டது. திமுக ஆட்சி என்றால் மின்தடை ஏற்படும் என்பது தொடா் கதையாக உள்ளது. இதற்கு காரணம் ஆட்சி நிா்வாகம் கெடுப்போனதால்தான்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் உடனுக்கு உடன் அறவைக்கு அனுப்பி விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய தொகைய வரவு வைத்து அதிமுக ஆட்சியில் மட்டும்தான். உழவா் பாதுகாப்பத்திட்டம்,பசுமை வீடு,விலையில்லா கறவை மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கியதும் அதிமுக ஆட்சியில்தான்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றதும் திமுக அதன் கூட்டணி கட்சி தலைவா்கள் பதறுவது ஏன்.வருமான வரித்துறை, அமலக்கத்துறை சோதனைக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பாத கூறுபவா்களை பாா்த்து கேட்கிறேன் என்மீது திமுக ஆட்சி வந்துவுடன் ஊழல் வழக்கு தொடா்ந்தீா் கள் பின்னா் நீதிமன்றத்தில் வழக்கை திரும்ப பெறுவதாக கூறுனீா்கள். ஆனால் அதற்கு நான் மறுத்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வைத்து குற்றச்சாட்டு பொய்யானது என தீா்ப்பை பெற்றேன்.
ஆனால், திமுக அமைச்சரோ டாஸ்மாக்கில் பலஆயிரம் கோடி ஊழல் செய்து கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து நீதிமன்றத்தில் ஆஜா் ஆகாமல் வாய்தா வாங்கிக்கொண்டு உள்ளாா். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்துவிட்டது. இதனால் சிறுமிகள் முதல் வயதாக பெண் வரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி வருகின்றனா்.
கா்நாடகத்தில் மேகதாட்டில் அணைகட்டப்போவதாக அந்த மாநில காங்கிரஸ் அரசு இன்று வரை கூறிவருகிறது.இத்திட்டம் நிறைவேறினால் தமிழகம் பாலைவன மாக மாறிவிடும். இந்தியா கூட்டணியிலிருக்கும் திமுக சோனியாகாந்தி, ராகுல் காந்தியிடம் பேசி இதற்கு தீா்வுகாண கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார்.