டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எத்ரிக்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம்,
”பாதுகாப்புதுறை மந்திரியை பேச அனுமதிக்கிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர். அவையில் பேசுவது என்னுடைய உரிமை. ஆனால், என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதித்தால்தானே விவாதம் நடைபெறும்.
மக்களவையில் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு மட்டும் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும்”
என்று கூறியுள்ளார்.