மும்பை: கடந்த  2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 180 பேர் பலியான நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில்,  குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு 8 நிமிட இடைவெளியில் 7மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை அரங்கேற்றினர். நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்திய இந்த  குண்டுவெடிப்புத் தாக்குதலில் 180 பேர் பலியாகினர். 829 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். 9 ஆண்டுகள் இந்த இந்த வழக்கின் முடிவுல், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவரை விடுதலை செய்தும் மும்பை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதித்தது, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்,  குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், மீதமுள்ள ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மறுத்துவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமனற்  நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு,  இந்த வழக்கை நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.  விசாரணையின்போது,  மகாராஷ்டிர அரசு, மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  விசாரணையின்போது,  பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 12 பேரும் விடியோ கான்பரன்சிங் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

வழக்கின் விசாரணையை அடுத்து இன்று முப்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களை விடுவித்துள்ளதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அரசு தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல  என்று ம்,   மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.