சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவம் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது.

NEET UG கவுன்சிலிங் 2025: மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), NEET UG கவுன்சிலிங் 2025 இன் சுற்று 1க்கான பதிவு சாளரத்தை ஜூலை 21, 2025 அன்று திறந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் பிற மத்திய நிறுவனங்களின் கீழ் MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கான இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1.18 லட்சம் MBBS இடங்களுக்கு போட்டியிடும் சுமார் 12.36 லட்சம் விண்ணப்பதாரர்கள் NEET UG 2025 தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். NEET UG கவுன்சிலிங் 2025 நான்கு சுற்றுகளாக நடத்தப்படும்: சுற்று 1, சுற்று 2, சுற்று 3 மற்றும் ஒரு Stray Vacancy சுற்று என பல சுற்றுக்கள் இந்த கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
அதே வேளையில், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
2025 – 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது. நாளை சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்) கலந்தாய்வு மாதவரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது.
நாளை மறுதினம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.