சென்னை:   தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் காலை உணவு திட்டம் ஏற்கவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஜூலை 15 காமராஜர் பிறந்தநாள்) அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும்  நடைமுறைக்கு வந்துள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மறைந்த முன்னாள் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து வந்த மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செம்மைப்படுத்தி வந்தன. மறைந்த எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதை மதிய உணவு திட்டம் என்று அழைத்தனர்.  இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது, பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்த நிலையில், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு  மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு,  அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படி சில அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.  பின்னர் அது முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டு 2025  ஜூலை 15ம் தேதி முதல் அனைத்து  அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி,   இதுவரை செயல்படுத்தடாமல் இருந்த நகர்ப்புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…