சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! என பதிவிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த தினம் இன்று. கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். அவரது பிறந்தநாளை அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சமுதாய அமைப்பிரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றர். தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருவதுட, பள்ளி, கல்லூரிகளில், பேச்சுப்போட்டி என பல போட்டிகளை நடத்தி கவுரவித்து வருகிறது.
இந்த நிலையில், நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் அமைத்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார்.