கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக உள்ளது, காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் உள்ள வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெறுவதுடன், சென்னை மக்களின் குடி நீர் தேவையையும்பூர்த்தி செய்து வருகிறது.
இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். ஏரிக்கு, காவிரி ஆற்று உள்பட பல்வேறு வழிகளில் இருந்து தண்ணீர்வந்துகொண்டிருக்கிறது. இதனால், தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வருவதால், ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது.
ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் ஏரி முழு கொள்ளவை எட்டியது. அதனால், சென்னைக்கு குடிநீர் வழங்க அதிக நீர் திறக்கப்பட்டதுடன், விவசாயத்துக்கும் நீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழை காரணமாக வீராணம் ஏறி மீண்டும் தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது.
ஏரிக்கு பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 1337 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி உள்ளது. மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.