ஐடிபிஐ வங்கியின் முக்கிய பங்குகள் விற்பனை அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும், பங்கு கொள்முதல் ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் விவாதித்துள்ளதாகவும், இது நிதி ஏலங்களை சமர்ப்பிக்கும் ஏலதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐடிபிஐ வங்கியின் தனியார்மயமாக்கல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.

அக்டோபர் 2022 இல், அரசாங்கம், எல்ஐசியுடன் இணைந்து, ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து EOI (Expression of Interest – ஆர்வத்தை வெளிப்படுத்துதல்) அழைத்தது, இதில் இந்திய அரசின் 30.48 சதவீத பங்குகளும் எல்ஐசியின் 30.24 சதவீத பங்குகளும் அடங்கும்.

இதற்கான செயல்முறை தற்போது நடைபெறுவதாகவும் விரைவில் அதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

IDBI வங்கியின் பங்குகளை வாங்க முன்வரும் முதலீட்டாளருக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை வழங்க மத்திய உள்துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை முன்வந்துள்ளன.