சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சிமூலம் தேர்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்படுகிறது. அதனப்டி, மருத்துவ பணியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதுபோல காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்ற 21 முதல் நிலை காவலர்களுக்கு அவர்களின் தவிநிலை உயர்வு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.