
டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது, அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது.
இணைய வழி செய்திதளங்களில் தனக்கென தனிபானியுடன் அரசியல் விருப்பு வெறுப்பின்றி வாசகர்கள் ஆதரவுடன் 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) .
கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜுன் 29) தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல தவழ்ந்து, உருண்டு, எழுந்து, நடந்து, 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து வாசகர்களின் பேராதரவுடன் இன்று 11வது ஆண்டில் தனது முதல் காலடியை எடுத்து வைத்துள்ளது..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா , விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம் சிறப்பு கட்டுரைகள் என அது மட்டுமின்றி ஆன்மிகம், சமையல் என்று அனைத்து வகையான செய்திகளையும் வாசகர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையுடனும், சிறப்பாகவும் நவரசத்துடன் வெளியிட்டு வருகிறது.
பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும், நிர்வாகத்தினர், முன்னாள், இன்னாள் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் முக்கியமாக பேராதரவு அளித்து வரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களாகிய உங்களுக்கு பத்திரிகை டாட் காம் இணைய இதழ் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
–ஆசிரியர்