சென்னை: தமிழ்நாடு முழுவதும், அரசு பள்ளிகளில் அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம் விட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஏற்கனவே இந்த திட்டம் கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் செயல்படுத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டம் ஜுலை முதல் அமலுக்கு வருகிறது.

அரசு பள்ளிகளில், வாட்டர் பெல் பயன்படுத்தி மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் என்ற குறியீடு வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி,  காலை 11 மணி, மதியம் 1 மணிக்கு வாட்டர் பெல் மணி நேரம் வழங்கப்பட வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாட  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்  அனுப்பியுள்ள சுற்றறிகையில்,   அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஜூலை மாதம் முதல் நாள் ஒன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது என்றும், மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வாட்டர் பெல் திட்டம் அடுத்த வாரம் முதல் (ஜுலை 2025)  நடைமுறைக்கு வரும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.