வாஷிங்டன்:  ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை விண்வெளியில் சுற்றி வரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து,  சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் நேற்று (ஜுன் 25) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் சரியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த பயணம் சுமார்  28 மணி நேரம் தொடர்ந்த நிலையில், பூமியில் இருந்து சுமார்   420 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 25) மாலை 4.01 மணியளவில் இணைந்தது.

இதைத்தொடர்ந்து,  இந்திய விண்வெளி வீரர் சுக்லாஉள்பட 4 பேரும் சர்வசதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அவர்களுக்கு   அங்கிருந்தவர்கள் குளிர்பானங்கள் (welcome drink) கொடுத்து வரவேற்றனர்.

இதுதொடர்பாக சுபான்ஷு சுக்லா குழுவினார் முன்னிலையில் பேசுகையில், “விண்வெளிக்கு வந்தது அற்புதமான ஒன்று. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவராக இருப்பதில் மிகவும் பெருமையாகவுள்ளது. சர்வதேச விண்வெளியில் இருந்த குழுவினர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். எனது எதிர்பார்ப்புகள் மற்றும் பார்வையை தற்போதைய குழுவினர் மிஞ்சிவிட்டனர்” என்றார்.

விண்வெளிக்குச் சென்ற டிராகன் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா ‘ஜாய்’ என்ற பெயரிடப்பட்ட மென்மையான அன்னப்பறவை பொம்மையை கையில் வைத்தபடி இன்-ஃப்ளைட் அப்டேட்டை வழங்குகிறார். வியாழக்கிழமை எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அவரது சக விண்வெளி வீரர்களான அனுபவமிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா) தளபதியாகவும், போலந்து பொறியாளர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரிய ஆராய்ச்சியாளர் டிபோர் கப்பு ஆகியோரும் உடன் இருந்தனர்.

 சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு  கிடைத்தது.  தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள 4 பேரும்  அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுபடுவார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் எனவும் கூறப்படுகிறது.

குழந்தையைப் போல உணர்கிறேன்: விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசிய சுபான்ஷு சுக்லா….

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்…! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி….