குற்றாலம்
கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது/

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்தபடி கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குறிபாக கடந்த 23-ந் தேதி மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இஎனவேஅவர்கள் புலியருவி, பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில் பழைய குற்றாலம், புலியருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்து நேற்றும் குறையாததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
ஆகவே அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக இன்றும் (26-06-2025) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.