சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.

2025/26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் பிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வாங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இந்த மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு மின்னணு கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த டெண்டர், 1 மில்லியன் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்குவதற்கானது. முதல் கட்டம், 1 மில்லியன் யூனிட்களை உள்ளடக்கியதாக, தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.காட்டி வருகின்றன. டெல், ஹெச்பி, லெனோவா, ஏசர், ஆசஸ் மற்றும் சாம்சங் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே மாநில அரசுடன் ஈடுபட்டுள்ளன, மேலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கூடுதலாக, மைக்ரோசாப்ட், கூகிள் மற்றும் இன்டெல் ஆகியவையும் முதற்கட்ட பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டுள்ளன.
இந்த திட்டம் இந்திய PC சந்தையை கணிசமாக உயர்த்தும் என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர், இருப்பினும் இது பெரிய ஆர்டர் அளவு காரணமாக விலை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான டெண்டர் ஜூலை 9ம் தேதி இறுதி செய்யப்படுகிறது.
20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…