ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார்.
இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர் நிறுத்தம் குறித்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் நேரடியாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தபோதும், பிரதமர் மோடி கனடா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இஸ்ரேல் – ஈரான் விவாகரத்தை தீர்த்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் பறந்துகட்டியதை அடுத்து இந்த நேரடி சந்திப்பு நிகழாமல் போனது.
இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் சுமார் 35 நிமிடம் உரையாடியதாகவும் அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய பிரதிநிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்த நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு செல்லும் வழியில் சைப்ரஸ் நாட்டிற்கு விஜயம் செய்த பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை நேரடியாக சந்திக்க முடியாத நிலையில் அவருடன் தொலைபேசியில் இதுகுறித்து விவரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்யும் பிரதமர் மோடி அடுத்ததாக க்ரோவேஷியா நாட்டிற்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.