சென்னை: தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2024-25ம் ஆண்டில் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி 2024-25ல் 3280 கோடி யூனிட்டு களாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு காற்றாலை, சூரியசக்தி போன்ற மின்தயாரிப்பு அலகுகள் அமைக்க சாதகமான பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென்மவாட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், சமீப காலமாக, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்யும் வடிகயில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025-25ம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் மின் உற்பத்தில் 3,280 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில், கடந்த ஏப்ரல், நிலவரப்படி, 2,321 மெகாவாட் திறனில் நீர்; 9,331 மெகாவாட் திறனில் காற்றாலை; 9,006 மெகாவாட் திறனில் சூரியசக்தி; 206 மெகாவாட் திறனில் பயோமாஸ் எனப்படும் உயிரி ஆற்றல்; 684 மெகாவாட் சர்க்கரை ஆலை இணை மின் நிலையங்கள் உள்ளன.
இதில், நீர் மின் நிலையங்களை மின் வாரியமும், மற்ற மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களும் அமைத்துள்ளன. மேற்கண்ட மின் நிலையங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக, கடந்த நிதியாண்டில், 3,280 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. இதுவே, 2023 – 24ல், 2,884 கோடி யூனிட்களாக இருந்தது. கடந்த ஆண்டில் மட்டும், 14 சதவீதம் அதாவது, 396 கோடி யூனிட் கூடுதலாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறும்போருது, தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன் உயர்ந்து வருவதால், மின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு ஏக்கர் விலை குறைந்தது, 25 லட்சம் ரூபாயாக உள்ளது. அதேசமயம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, அம்மாநில அரசுகளே, மிகக்குறைந்த விலையில் நிலங்களை குத்தகைக்கு வழங்குகின்றன. அம்மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் செல்வதால், நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தமிழகம், இரண்டாவது இடத்திற்கு சென்றுஉள்ளது.
குறைந்த விலையில் நிலம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதுடன், நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட வேறு எந்த இடையூறும் செய்யவில்லை எனில், தமிழகத்தில் தான் புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்கள் அதிகஅளவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.