சென்னை: பாரா மெடிக்கல், ‘செவிலியர்’, டிபார்ம் போன்ற டிப்ளமாக படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது.

இந்த படிப்புகள் வெளிநாடுகளில் பணி வாய்ப்பை பெற பேருதவியாக இருக்குமை. படித்து முடித்தால், வெளிநாடுகளில் மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பெற விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. இதற்காகவே “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வெளிநாடுகளில் வேலைசெய்ய விரும்புவோருக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. மத்திய அரசின் குடிபெயர்வோர் சட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது. வெளிநாடு செல்ல விரும்புவோர் இந்த புதிய இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து பயன்பெற முடியும்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளில் நல்ல வேலை வாய்ப்புள்ள துறைகளில் துணை மருத்துவ படிப்புகளும் முக்கியமான ஒன்று. அதன்படி, பிபார்ம், செவிலியர், பாராமெடிக்கல் கோர்ஸ் படித்த ஏராளமானவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல சம்பளத்துடன் நல்ல வாழ்க்கை தரத்துடன் வேலை காத்திருக்கிறது. அதனால், தமிழ்நாடு அரசு, அதுபோன்ற படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து, படித்து முடித்தவர்களுக்க வெளிநாடுகளில் பணி வாய்ப்பை பெற்று வழங்கி வருகிறது.
இந்த நிலையில், பாராமெடிக்கல் கோர்ஸ், டிப்ளமாக நர்சிங் கோர், பாஃம்டி போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், இன்று (ஜுன் 17) முதல் வரும் ஜூலை 7ஆம் தேதி வரை www.tnmedicalsselection.org ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்கள், அதற்கான தேர்வுகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு வழங்கும், @naan_mudhalvan திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் கற்றுத்தரும் சிறப்பு டிரைவ்வின் போது அதில் சேர்ந்து பயிற்சியும் பெற்றுக் கொள்ளலாம். அது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு மிக உதவியாக இருக்கும்.

Patrikai.com official YouTube Channel