சென்னை: பதவி உயர்வில் சமூக நீதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஜிஎம். தற்போது, சென்னையில் உள்ள தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகராகவும், மகளிர் கல்வித் துறையின் பொறுப்பாளராகவும் உள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டுள்ள இவர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன் மூத்த வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார்.
[youtube-feed feed=1]