கமதாபாத்

நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார்

நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.

வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றார். இதனால் அவர் உயிர் தப்பி உள்ளார்.

பூமி சவுகான் இது குறித்து,

“நேற்றைய விமான விபத்தை அறிந்தவுடன் உடல் நடுங்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை ”

என தெரிவித்துள்ளார்.