அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை இரவு 7மணி நிலவரப்படி, 204 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 41 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை, 242 பயணிகளும் பலியாகி இருக்க வாய்ப்பு இருப்பதாக அகமதாபாத் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் சென்ற ஏர்இந்தியா போயிங் 787 ரக விமானம், விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. , இன்று பிற்பகல் பிற்பகல் 1.38 மணியளவில் புறப்பட்ட விமானம் சுமார் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் அடுத்த ஓரிரு நிமிடங்களில் கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விமானத்தில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேர் பணயித்த புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்கு உள்ளானது. விமானம் விழுந்ததும் பெரும் நெருப்புடன் வெடித்து, வானுயர கரும்புகை எழுந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் உடன் காவல்துறையினரும் இணைந்து உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீக்காயம் காயடைந்த பலரை மீட்ட மீட்புப் படையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் சிகிச்சை பெற்று வந்த குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானியும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீதும் மோதி வெடித்து சிதறியது. இதனால் மருத்துவமனையின் சில பகுதிகளில் கடும் சேதம் அடைந்த நிலையில், அப்போது மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களும் காயமடைந்தனர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்கு ஆளானவர்களை அடையாளம் காண, அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் அகமதாபத் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விபத்து குறித்து நேரில் சென்று பார்வையிட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விமான போக்குவரத்துதுறை அமைச்சர்களை அகமதாபாத்துக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்துநடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோரும் அவருடன் உள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிப்பு…