அகமதாபாத்: இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Ahmedabad plane crash – Emergency helpline announced. control room at phone number 079-232-51900 & mobile number 9978405304.

242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த விமானத்தில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்கு உள்ளானது. விமானம் விழுந்ததும் பெரும் நெருப்புடன் வெடித்து, வானுயர கரும்புகை எழுந்தது.
இந்த விபத்தில் காயடைந்த பலரை மீட்ட மீட்புப் படையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் விமானம் மோதிய மருத்துவமனையிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனுள் இருந்த மிருத்துவர்கள் உள்பட சிலர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் ரூபானியின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள். இவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் இருந்துள்ளனர். பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இயங்க உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், மாலை 4மணி நிலவரப்படி, இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதில், கட்டடத்தில் இருந்த மாணவர்களும், மருத்துவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதில் பலபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பயணிகள் குறித்த தகவலுக்கு 1800 5691 444 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ahmedabad plane crash – Emergency helpline announced. control room at phone number 079-232-51900 & mobile number 9978405304.