குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் விழுந்ததில் அந்தப் பகுதியில் எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தெரிந்தது.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் இந்த விபத்தில் சிக்கியதாகவும் இந்த விமானத்தில் 130 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மெகானி நகர் பகுதியில் இந்த விமானம் விழுந்ததை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.