சென்னை
விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்று ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று பரவல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து முதற்கட்ட தகவல் வெளியானது. இது தற்போது 5,000 தொட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, கேரளாவில் 1,487 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் 562 பேரும், மகாராஷ்டிராவில் 526 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் (508), மேற்கு வங்கத்தில் (538), கர்நாடகாவில் (436), உத்தரப்பிரதேசத்தில் (198) மற்றும் ராஜஸ்தான் (103) உள்ளிட்ட பிற மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெரப்பேரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஹைதாராபாத்தில் பில்டிங் காண்ட்ராக்டராக (ஒப்பந்ததாரர்) பணி செய்து வந்தார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கபட்டது. இதனால், தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவர் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரனோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.