டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில்  சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார்.

பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்   ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார்.   அவரே  மரத்தை வைக்கும் வகையில்,  மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்று (ஜூன் 5)  உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி,  இன்று  பிரதமர் மோடி  டில்லியில் உள்ள தனது இல்லத்தில் (லோக் கல்யாண் மார்க்கில்)   ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் கட்ச் நகருக்கு விஜயம் செய்தபோது, ​​1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில்,  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி உடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சிந்தூர் மரத்தை நட்டது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில்,  1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் அவற்றை இன்று நட்டு வைத்துள்ளேன். இவை, நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.