சென்னை: “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும் என கூறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது படமான தஃக் லைப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போர்குரல் தூக்கி உள்ளது. அவரது படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆனால், கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என கூறி வருகிறது.
இந்த நிலையில், கமல் படத்துக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும், கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்பதை எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் நாளை மறுநாள் (ஜூன் 5) வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் அவர் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியது. இதனால் கர்நாடகாவில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகாவில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
“நீங்கள் கமல்ஹாசனாக இருக்கலாம்… ஆனால் எந்தவொரு குடிமகனுக்கும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் மூன்று விஷயங்கள் உள்ளன. அவை நெலா, ஜலா மற்றும் பாஷே, (நிலம், நீர் மற்றும் மொழி)… இந்த மூன்று விஷயங்களும் எந்தவொரு குடிமகனுக்கும் முக்கியம்.
நாட்டின் பிரிவினை மொழி அடிப்படையில்தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே நீங்களும் (கமல்) அதன் முக்கியத்துவத்தை அறிவீர்கள்.
“நீங்கள்(கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது . தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா?” என பல்வேறு கேல்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், . உங்களின் கூற்றால் அமைதியின்மை, நல்லிணக்கமின்மையே நிலவுகிறது. கர்நாடக மக்கள் என்ன கேட்டார்கள்? மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் உருவாக்கிய சூழ்நிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். கர்நாடக மக்கள் இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்களா?”.ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, மதிய உணவுக்கு முந்தைய விசாரணையில், நீதிபதி எம். நாகபிரசன்னா, கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், அந்தக் கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்குமாறு வாய்மொழியாக ஹாசனுக்கு அறிவுறுத்தினார். மதிய உணவுக்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது, கட்சிகளின் வாதங்களைக் கேட்ட பிறகு, படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்த மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது, மேலும், “மனுதாரர் தற்போது திரைப்பட வர்த்தக சபையுடன் ஒரு உரையாடலை ஊக்குவிக்காவிட்டால், கர்நாடகாவில் படத்தைத் திரையிடத் தயாராக இல்லை என்று கூறப்பட்டது. இந்த விஷயத்தில் KFCC மன்னிப்பு கோரியதாக கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் மேலும் கூறினார், ஆனால் நீதிபதி, மேற்கோள் காட்டப்பட்ட கடிதம் மன்னிப்புக்கான பதில் கோரிக்கைக்கான பதில், ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை காணப்படவில்லை. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, உரையாடல் நடக்கும் வரை கர்நாடகாவில் திரையிடல் செய்யப்படாது என்று உத்தரவிட்ட நீதிபதி அடுத்த விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என அறிவித்தார்.