சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சி – 1.
ராஜாஜி நகர் 4வது தெருவில் முதியோர் இல்லம் கட்ட முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
நிகழ்ச்சி – 2.
ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஹரிச்சந்திரா விளையாட்டு மைதானத்தில் அனித்தா அச்சுவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ மாணவிகள் 356 பேருக்கு தையல் இயந்திரம், 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 100 பேருக்கு இலவச கண்ணாடிகள் ஆகியவற்றை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்க உள்ளார் .
நிகழ்ச்சி – 3.
ஜி.கே.எம் காலனி 24A தெருவில் புனரமைக்கப்பட்ட குளத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நிகழ்ச்சி – 4.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 317 மாணவ மாணவிகளுக்கு Vதல்வர் மு க ஸ்டாலின்நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
நிகழ்ச்சி – 5மு
பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 உடல் ஊனமுற்றோருக்கு இருசக்கர வாகனங்கள் (Scooty) ,உதல்வர் மு க ஸ்டாலின்வழங்க உள்ளார்.
நிகழ்ச்சி – 6.
புதிதாக கட்டப்பட்ட தனிகாச்சலம் கால்வாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.