சென்னை: சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும் என முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அயோத்தி தாசர் பிறந்தநாளையொட்டி, அவரது உருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், மாநகர மேயர் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும் என கூறியுள்ளார்.

மேலும், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் அயோத்திதாச பண்டிதர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் ‘திராவிடப் பேரொளி’ அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!
என பதிவிட்டுள்ளார்.