சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இன்று காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது, இதேபோல் 11ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்று நிறைவு பெற்றது.
இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ளது. 10-ம் வகுப்பு . பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேரும் எழுதி இருந்தார்கள். தேர்வு முடிந்த பிறகு, விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது
. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
இதுதவிர தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.